கோவை எங்கள் கோட்டை...! முழங்கிய எல்.முருகன்...!

published 11 months ago

கோவை எங்கள் கோட்டை...! முழங்கிய எல்.முருகன்...!

கோவை: கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், கோவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து  கொள்ளும் பிரமாண்டமான ரோடு ஷோ பொதுமக்கள் ஆதரவு உடன் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலமாக தென் இந்தியாவை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என கூறிய அவர் நாளை சேலத்தில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளதை குறிப்பிட்டார்.  தென்னிந்தியாவில் முழுமையாக பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் எனவும் இது பாஜகவினருக்கு  மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உள்ளதாக தெரிவித்தார்.


கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறந்த நல்லாட்சியை தந்துள்ளார் எனத் தெரிவித்த அவர் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே அவரது எண்ணம் என்றார். இந்தியாவை வல்லரசு நாடாக்க வேண்டும் என பிரதமர் உழைத்துக் கொண்டுள்ளார் எனவும் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாஜகவிற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள் எனவும் கூறினார்.

தேசத்திற்கு எதிரானவர் யார் என்பது மக்களுக்கு தெரியும் என கூறிய எல்.முருகன் நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வது யார் என்பதும் மக்களுக்கு தெரியும் என்றார்.

கொள்ளையடிப்பதும், ஊழல் செய்வதும் தான் இண்டி கூட்டணி நோக்கம் என விமர்சித்தார். நாட்டின் வளர்ச்சி தான் பாஜக இலக்கு. 2 ஜி ஊழல் வழக்கில் மிக விரைவில் தீர்ப்பு வரும்.
யாரையும் மிரட்டி தேர்தல் பத்திர நிதி வாங்கவில்லை.திமுக, காங்கிரஸ் அப்படி தான் தேர்தல் பத்திர நிதி வாங்கினார்களா? தாங்களாக முன்வந்து தேர்தல் பத்திர நிதியை தந்துள்ளார்கள். மாநிலத்தில் அதிக நிதி தேர்தல் பத்திரம் மூலம் வாங்கியது திமுக தான். என்ன ஊழல் செய்து அந்த நிதியை வாங்கினார்கள்? 2 ஜியில் ஆகாயத்தில் ஊழல் செய்தது ஆ.ராசா. அதனால் பயன்பட்டது திமுக குடும்பம் என்றார்.


ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் திமுகவிற்கு கிடையாது. பிரதமர் மோடி ஊழலற்ற நிர்வாகத்தை தந்து வருகிறார் எனவும் கூறினார். பாஜக அமைச்சர்கள் மீதோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதோ சிறிய புகார்கள் இல்லை. தேர்தல் பத்திர நிதி விபரங்களை கட்சி தலைமை வெளியிடும். பொன்முடியை உச்சநீதிமன்றம் குற்றமற்றவர் என சொல்லவில்லை. அதனால் தான் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
நீலகிரி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, நான் ஒரு சாதாரண தொண்டன். கட்சி கட்டளை என்னவாக இருக்குமோ, அதை நிறைவேற்றுவது தான் சாதாரண தொண்டனின் கடமை, பணி. கட்சி சொன்னால் போட்டியிடுவேன். நீலகிரி தொகுதி மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் நிதி ஒதுக்கி மக்கள் பணிகளை செய்து வருகிறேன்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ராகுல்காந்தி, ஸ்டாலின் தோல்வியின் விழும்பில் இருக்கிறார்கள். 

நாடாளுமன்ற தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைப்பார். கூட்டணி இன்னும் இரண்டு மூன்று நாட்கள் உறுதியாகும். கோவை பாஜக கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவது உறுதி எனத் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe