கோவையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு சவப்பெட்டியுடன் வந்த வேட்பாளரால் பரபரப்பு...

published 11 months ago

கோவையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு சவப்பெட்டியுடன் வந்த வேட்பாளரால் பரபரப்பு...

கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது என்பவர் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு  தாக்கல் செய்வதற்கு  "ஜனநாயகம் இறந்து விட்டது" என குறிப்பிடும் வகையில் சவப்பெட்டியுடன் மனுத்தாக்கல் செய்ய வருகை புரிந்திருந்தார்.

 

அவரை 200 மீட்டருக்கு முன்பு தடுத்து நிறுத்திய போலீசார் சவப்பெட்டியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.அவரை மட்டும் வேட்பமான தாக்கல் செய்வதற்கு வருமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்மாவில் ஈடுபட்டார்.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்…

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நூர் முகமது, 1996-ம் ஆண்டு முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருவதாகவும் 97-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் மாமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து ஜனநாயக முறைப்படி யாரும் இல்லை ஜனநாயகத்தில் மக்கள் ஓட்டு போடுவதற்கு பணம் பெற்று தான் ஓட்டு போடுகிறார்கள் என்று கூறினார்.

மேலும் ஏற்கனவே 41 முறை வேட்பு மனு தாக்கல் செய்து விட்டதாகவும் தற்பொழுது 42-வது முறையாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஜனநாயகம் இறந்துவிட்டது என்ன வலியுறுத்தி சவப்பெட்டி கொண்டு வந்த போது காவல்துறையினர் அதனை மடக்கி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறினார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe