கோவையில் கொண்டாடப்பட்ட ஹோலிப் பண்டிகை...

published 10 months ago

கோவையில் கொண்டாடப்பட்ட ஹோலிப் பண்டிகை...

கோவை: கோவையில் வண்ணப் பொடிகளை பூசி வட இந்தியர்கள் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

 

வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலிப் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒன்றாகும். இந்த பண்டிகையின் போது வண்ண, வண்ண பொடிகளை ஒருவருக்கொருவர் பூசிக் கொண்டு நடனமாடி பாடல்கள் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், காந்திபார்க், வெரைட்டி ஹால் பகுதிகளில் அதிகமான வட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்...

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக கூடி ஒருவர் ஒருவர் வண்ண பொடிகளை பூசிக் கொண்டு விஷ்ணு கடவுளை வழிபட்டு பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வர்.

இதை தொடர்ந்து இன்று ஆர்.எஸ்.புரம்,   பூசாரிபாளையம் பகுதியில் உள்ள டைமண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வரும் மகாராஷ்டிரம், குஜராத், கேரளா, ஆந்திரா, தமிழகம் போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து மாநில மக்களும் ஒன்று இணைந்து வட மாநிலத்தவர்கள்  ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

மேலும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஷவரில் ரசாயனம் கலக்காத இயற்கையான வண்ண கலர் பொடியை கலந்து நடனமாடியவாறு பாடி, ஆடி, குளித்து மகிழ்ந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் பல்வேறு வகையான உணவு வகைகள் சமைத்து அனைவருக்கும் பரிமாறி கொண்டாடி மகிழ்ந்து வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe