கோவையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி- வைகோ மற்றும் துரை வைகோ கூறுவது என்ன?

published 10 months ago

கோவையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி- வைகோ மற்றும் துரை வைகோ கூறுவது என்ன?

கோவை: ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான சேர்ந்த கணேஷமூர்த்தி(மதிமுக) நேற்று திடீர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளரான துரை வைகோ,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூர்த்தியை பார்த்து திரும்பினார்.

இது குறித்து துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலமின்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும்  கவலைக்கிடமாக உள்ளார் எனவும் தெரிவித்தார். அவருக்கு எக்மோ சிகிச்சை கொடுத்து வரப்படுகிறது என்றார். 24-48 மணி நேரம் கடந்து தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.

இருதய சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது எனவும் பிற உறுப்புகளுக்கான ஆய்வறிக்கைகள் வந்தால் தான் முழுமையாக சொல்ல முடியும் என்றார்.

சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளதாகவும், காப்பாற்ற வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிவித்தார்.   ஈரோட்டிலேயே வயிறு சுத்தம் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் , 
ரத்தத்தில் கலந்துள்ளதால் இருதய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்றார். 

மேலும் அனைவரும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை என்றார்.

பின்னர் வந்த வைகோ, கூறுகையில்,  கணேசமூர்த்தி அறிஞர் அண்ணாவை நேரில் பலமுறை சந்தித்தவர்.  சட்டமன்ற உறுப்பினர் ஆகி மக்களின் அன்பையும் பெற்றார். நாடாளுமன்றத்தில் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

இம்முறை கட்சியில் அனைவரும் சேர்ந்து துரை வைகோவை அனுப்ப வேண்டும் கணேசமூர்த்திக்கு அடுத்த வாய்ப்பு பார்ப்போம் என்று கூறினார்கள். அதற்கு நான் ஏற்றுக் கொள்ளவில்லை பிறகு ஓட்டெடுப்பு எல்லாம் நடத்தப்பட்டது 99 சதவிகிதம் அவரை நிறுத்த வேண்டும் என்றார்கள். இரண்டு சீட்டுகள் வாங்குங்கள் ஒன்றை கணேசமூர்த்திக்கும் ஒன்றை துரை வைகோவுக்கு கொடுப்போம் என்று கூறினார்கள். 

அது போன்று செய்யலாம் என்று கூறினேன் அதன் பிறகும் வாய்ப்பில்லாமல் போனால் ஒரு வருடத்தில் சட்டசபை தேர்தல் வருவதால் அவரை எம்எல்ஏ வாக நிற்க வைக்கலாம் என்று எண்ணினேன். இல்லையெனில் அதை விட பெரிய பதவியை ஸ்டாலினிடம் கேட்டு அவருக்கு வாங்கி தரலாம் என்று பார்ப்போம் என்று நினைத்தேன். சட்டமன்ற தேர்தல் வரும்பொழுது அவருக்கு உண்டான காயம் ஆரிவிடும். அவர் தென்னை மரத்திற்கு போடுகின்ற நஞ்சினை கலந்து குடித்திருக்கிறார். 

பிறகு அங்கு வந்த கபிலனிடம் இதைக் கூறி நான் போயிட்டு வருகிறேன் என்று சொன்னாராம் அதனை தொடர்ந்து உடனடியாக ஈரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரத்த அழுத்தம் குறைகிறது அதனால் சடேஷனில் வைத்துள்ளார்கள். 

அனைவரும் நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். இரண்டு நாள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe