ஈரோடு எம்பி தற்கொலைக்கு கூறப்படும் காரணத்தை நான் ஏற்க மாட்டேன்-கோவையில் வைகோ பேட்டி...

published 10 months ago

ஈரோடு எம்பி தற்கொலைக்கு கூறப்படும் காரணத்தை நான் ஏற்க மாட்டேன்-கோவையில் வைகோ பேட்டி...

கோவை: ஈரோடு எம்பி கணேசமூர்த்தி மறைவிற்கு செல்வதற்காக விமானம் மூலம்  கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். 

அப்போது பேசிய அவர் திமுக உறுப்பினராக வேண்டா வெறுப்பில் சேர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினரானார் கனேசமூர்த்தி 
இப்போது திமுக உறுப்பினராக இருந்து கொண்டு வேறு பொறுப்பிற்கு வரமுடியாது என்று கூறியவர் அவர், சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவிக்க பட்டு இருந்தது
அப்பொழுது இரு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள், என்று என்னிடம் கூறி இருந்தார். 

ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று சொல்லி இருந்தார். தேர்தல் முடிந்த பின்பும் இருவரும் வீடுகளுக்கு சென்று வந்திருக்கின்றோம். உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கின்றோம்.

நானும் கணேசமூர்த்தியும், 
கொள்கையும், லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் கனேசமூர்த்தி. ஆனால் சில நாட்களாக வே அவர் மிகவும் மன அழுத்ததில் இருப்பதாக என்னிடம் ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர் 
இந்த முடிவிற்கு வருவார் என நான் கனவிலும் நினைக்க வில்லை. 

பெரிய இடி தலையில் விழுந்தததை போல இருக்கின்றது. அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை விட மருந்து குடித்து விட்டார் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறியவர் கண்ணீர், நா தழுதழுக்க அழுதார். மருத்து குடித்து விட்டார் என்ற போதே எனக்கு உயிர் போய்விட்டது, எம்.பி.சீட் கிடைக்காத்தால் இறந்தார் என்பது உண்மையல்ல பலர் அவ்வாறு கூறிவருகின்றனர்  இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe