இயக்குனர் ஷங்கர் மகளுக்கு டும்.. டும்.. டும்... பிரம்மாணடத்திற்கா பஞ்சம்?

published 10 months ago

இயக்குனர் ஷங்கர் மகளுக்கு டும்.. டும்.. டும்... பிரம்மாணடத்திற்கா பஞ்சம்?

பிரமாண்ட இயக்குநர் என அனைவராலும் கொண்டாடப்படுபவர்  ஷங்கர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  மூத்த மகள் ஐஸ்வர்யா, இவரது இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்துள்ளார். ஆனால் சினிமாவின் மீது இருந்த ஆசையால் அதிதி விருமன் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக  அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திலும் நடித்து கவனத்தை பெற்றுள்ளார்.  

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கிரிக்கெட் வீரரான ரோஹித் என்பவரை கொரோனா சமயத்தில் திருமணம் செய்து கொண்டார்.  இந்தத் திருமணத்தில் குறைவான உறவினர்களே கலந்து கொண்டனர். ஆனால் ரோஹித்துக்கு திருமணம் செய்து வைத்த 6  மாதத்தில் அவர்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் ரோஹித் மீது பல குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

இதனால், மனம் ஒத்துவராமல் தொடர்ந்து பிரச்சினை வர திருமணம் ஆகி ஆறு மாதங்கள் கழித்து சட்டப்படி விவாகரத்து  ஐஸ்வர்யா கோரினார். பின்பு,  கணவரை விவாகரத்து செய்து விட்டு ஐஸ்வர்யா தன்  அப்பா வீட்டில்  இருந்தார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாம் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு  மிகவும் எளிமையாக திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.  

வருகிற 15- ந்தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் இயக்குனர் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்துவிட்டதால், திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்.  மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கும்  திருமண அழைப்பிதழ் வழங்கி திருமண விழாவை விமர்சையாக நடத்த ஷங்கர் திட்டமிட்டு உள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe