கோவையில் தேவாலயப் பணிகளில் மோசடி செய்த நபர்கள் மீது வழக்குப்பதிவு...

published 10 months ago

கோவையில் தேவாலயப் பணிகளில் மோசடி செய்த நபர்கள் மீது வழக்குப்பதிவு...

கோவை: கோவை ரேஸ்கோர்சில் உள்ள தேவாலயத்தில் சார்லஸ் சாம்ராஜ்(45) என்பவர் பாதிரியாராக இருந்தார். அவர் ஆலய கட்டுப்பாட்டை மீறியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இதற்கிடையே கடந்த ஈஸ்டர் தினத்தின் முந்தைய நாளில் தேவாலயத்தில் பண்டிகை கொண்டாட ஏற்பாடுகள் நடந்தது. அப்போது அங்கு வந்த சார்லஸ் சாம்ராஜ், ராஜேஷ் ஆகியோர் அங்கிருந்த மேஜைகள், நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தி ரகளை செய்தனர். 

இது குறித்த புகாரின் பேரில், இருவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கோவை அழகப்பா ரோட்டை சேர்ந்த வழக்கறிஞர் சாக்ரடீஸ்(57) என்பவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சார்லஸ் சாம்ராஜ், ராஜேஷ், யேசுபால், வின்பிரெட் ஆகியோர் தேவாலயத்தின் உண்டியலில் உறுப்பினர்கள் செலுத்திய தொகை ரூ. 14.66 லட்சத்தை முறையாக கணக்கு காட்டாமல் மோசடி செய்து விட்டனர். 

மேலும் அவர் பாதிரியாராக இருந்த கால கட்டத்தில் தேவாலயத்துக்கு காலண்டர் வாங்கியது, திருவிழா நேரத்தில் உணவு செலவு என கணக்கு காண்பித்து ரூ. 6 லட்சம் மோசடி செய்துள்ளனர். மொத்தமாக ரூ. 21 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார். 

புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் சார்லஸ் சாம்ராஜ், ராஜேஷ்(35), யேசுபால்(50) மற்றும் வின்பிரெட் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe