கோவை, மதுரையில் மழைக்கு வாய்ப்பு.. எந்த நாட்களில் தெரியுமா!

published 3 weeks ago

கோவை, மதுரையில் மழைக்கு வாய்ப்பு.. எந்த நாட்களில் தெரியுமா!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/BECRyb4cFcSLk2dVyBE1vu

கோவை: கோவை மற்றும் மதுரையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குளு-குளுவென இருந்த கோவையில் தற்போது சென்னையை விட அதிகமாக வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. மார்ச் மாதத்தின் பல நாட்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இதே போல் மதுரையிலும், வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.


இன்று கோவையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும், நாளை 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வரும் 12ஆம் தேதி கோவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்; 13 ஆம் தேதியும் இதே போல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


வரும் 14, 15ஆம் தேதிகளில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் வரும் 12ஆம் தேதி மற்றும் 13ஆம் தேதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்; 14, 15ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


மழை அறிவிப்பு வெளியானது கோவை, மதுரை மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw