கோவையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்…

published 10 months ago

கோவையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்…

கோவை: கோவையில் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் 4 நாட்களுக்கு மதுபானக்கடைகள் இயங்காது என கோவை மாவட்ட ஆட்சித்தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில்(FL2) செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் (FL3) செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல்(FL3A) மிலிட்டரி கேண்டீன்கள்(FL4(A) மற்றும் விமான நிலையத்தில் உள்ள மதுக்கூடம்(FL10) இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் (FL11) உள்ளிட்ட அனைத்து FL1முதல் FLn (FL6-ஐ தவிர்த்து) வரை உள்ள உரிமத்தளங்களை 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலினை முன்னிட்டு எதிர்வரும் 17.042024(புதன் கிழமை)காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணி வரை மற்றும் 04.06.2024 வாக்கு எண்ணிக்கை நாளன்றும் மூட (Dry day) உத்திரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe