கோவை வாக்காளர்களே வாக்களிக்க வாகன வசதி தேவையா?- இந்த எண்ணை அழையுங்கள்...

published 10 months ago

கோவை வாக்காளர்களே வாக்களிக்க வாகன வசதி தேவையா?- இந்த எண்ணை அழையுங்கள்...

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறும்  மக்களவை பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க ஏதுவாக ஸ்வர்கா பவுண்டடேசன், எம்.கே பவுண்டேசன், கோயம்புத்தூர் ஆகிய தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தங்களுக்குரிய வாக்குசாவடிகளில் வாக்களிக்க ஏதுவாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனம் உதவி தேவைப்படுவோர்  7397700482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை 17.04.2024 அன்று மாலை 6.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறும் இந்த வாய்பினை பயன்படுத்தி கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயக உரிமையை நிலைநாட்டிடுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி  தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe