உழவன் செயலியில் பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு..!

published 2 years ago

உழவன் செயலியில் பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு..!

கோவை: உழவன் செயலியில் பதிவு செய்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக தொகுப்பு தரிசு நிலங்களில் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டு சாகுபடிக்கு உகந்த நிலங்களாக மாற்றப்படுகிறது.

மேலும் தொகுப்பு தரிசு நிலங்களில் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்தி, மண் மற்றும் நீரின் தன்மைக்கேற்ற குறைந்தநீர் தேவையுடைய பலன் தரக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்திட திட்டத்தில் வழிவகை உள்ளது.
கோவை மாவட்டத்தில் இத்திட்டம் 56 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன் ஆனைமலை வட்டாரத்தில் திவான்சாபுதூர், தென்சித்தூர், சோமந்துறை, பில்சின்னம்பாளையம், ரமணாமுதலிபுதூர் பகுதிகளும், அன்னூர் வட்டாரத்தில் ஓட்டர்பாளையம், பச்சாபாளையம், பிள்ளியப்பப்பாளையம், அல்லப்பாளையம் பகுதிகளும்,
காரமடை வட்டாரத்தில் ஜடயம்பாளையம், ஓடந்துறை பகுதிகளும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் கப்பாளங்கரை, கக்கடவு, தேவராயபுரம், பொட்டையாண்டிபுரம்பு, கோவிந்தாபுரம், மன்றாம்பாளையம், குதிரையாலாம்பாளையம், முள்ளுபாடி பகுதிகளும்,

மதுக்கரை வட்டாரத்தில் மலுமிச்சம்பட்டி, வழுக்குபாறை, பாலத்துறை பகுதிகளும் பெரியநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் குருடம்பாளையம், சின்னதடாகம் பகுதிகளும்,
பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் தேவம்பாடி, குள்ளக்காபாளையம், நல்லூத்துகுளி, புளியம்பட்டி, ஆவலப்பம்பட்டி, ராசக்காபாளையம், கிட்டாசூராம்பாளையம், பூசாரிபட்டி, ஒக்கிலிபாளையம், காபிலிபாளையம் பகுதிகளும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் தென்குமாரபாளையம், ஜிஞ்சுவாடி, கோமங்கலம்புதூர், நல்லாம்பள்ளி இஎஸ்.மலையாண்டிபட்டிணம், வக்கம்பாளையம், சீலக்காம்பட்டி பகுதிகளும், சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் வெள்ளமடை, அக்கரஹரசாமக்குளம், அத்திபாளையம் பகுதிகளும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் ஜே.கிருஷ்ணாபுரம், போகம்பட்டி, வடவேடம்பட்டி, ஜல்லிபட்டி, பாப்பம்பட்டி, இடையர்பாளையம் பகுதிகளும், சூலூர் வட்டாரத்தில் பட்டணம், பீடம்பள்ளி, மயிலம்பட்டி பகுதிகளும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் மத்வராயபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், வெள்ளமலைபட்டிணம் பகுதிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத்தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு கைபேசியில் உழவன் செயலியில் தாங்களாகவே பதிவு செய்திட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவேற்றம் செய்த விபரங்களை துறை அலுவலர்கள் தொகுப்புதரிசு நிலத்தினை நேரில் பார்வையிட்டு சரிபார்த்தபின்பு நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டு ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க்கிணறு அமைத்துக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள். ஆகவே இந்த நல்லவாய்ப்பை பயன்படுத்தி தரிசு நிலமுடைய விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து பயனடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe