பா.ஜ.க., தேர்தல் அறிக்கை வெளியீடு! என்னென்ன அறிவிப்புகள்? - முழு விவரம்!

published 2 weeks ago

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை வெளியீடு! என்னென்ன அறிவிப்புகள்? - முழு விவரம்!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

டில்லி: மத்தியில் ஆளும் பா.ஜ.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் பா.ஜ.க., ஆட்சி நிறைவடைவாதை முன்னிட்டு வரும் 19ம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.


தேர்தல் அறிவிப்பு நாளில் இருந்து ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வந்தன. இதனிடையே இன்று பா.ஜ.க., தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா, அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் மேடையில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.


முன்னதாக பேசிய ஜெ.பி. நட்டா, “மோடியின் கியாரண்டி எப்போதும் நிறைவேற்றப்படும் என்று நாடு நம்புகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் தெரியவந்துள்ளது” என்றார்.

பா.ஜ.க., தேர்தல் அறிக்கைய வெளியிட்ட பின் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:


வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் கூடிய தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து கருத்துக்களை தெரிவித்த அனைத்து மக்களுக்கும் நன்றி.

இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகளை மையமாகக் கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். எங்கள் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு நன்றி.


நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைபடுத்தப்படும், பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும்.

2025ம் ஆண்டு பழங்குடியினர் கவுரவ ஆண்டாக அறிவிக்கப்படும்.  நாடு முழுவதும் உள்ள பிரதமர் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருந்துகள் விற்பனை செய்யப்டும்.


ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம், 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்திட்டத்த விரிவுபடுத்துவோம்.

அடுத்த 5 ஆண்டுகளில் மேலும், 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படும்.
இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தொடரும்.


குறைந்த விலையில் பைப் மூலமாக கியாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். முத்ரா கடன் உதவி திட்டம் மூலமக வழங்கப்படும் கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து, ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். 

மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்;சானிடரி நாப்கின் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும். திருநங்கைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் விடப்படும். வரும் 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


நிலவில் இந்தியர்கள் கால் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதில் பெருமை அடைவோம். திருவள்ளுவர் கலாச்சார மையம் உருவாக்கப்படும். தமிழ் மொழியை அனைத்து இடங்களிலும் பரப்பும் புதிய திட்டம் கொண்டுவரப்படும்.


பெண்களின் கர்ப்பப் பை, வாய் புற்று நோயை தடுக்க தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும். மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்படும். இந்தியா சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படும் புதிய சேட்டிலைட் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

வந்தே பாரத் மெட்ரோ, ஸ்லீப்பர் உட்பட 3 வகையான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.லாரி ஓட்டுநர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு மையம் அமைக்கப்படும்.


நாட்டில் சூரிய ஒளி மூலம் நாடு முழுவதும் மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

என்று பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையை கூறியுள்ளார்.


பா.ஜ.க. தேர்தல அறிக்கைக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பெண் என்ன? வாக்குகளை பதிவு செய்ய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்




சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw