மிளிரும் அழகு; வெளிப்படும் தன்னம்பிக்கை: நயன்தாரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!

published 10 months ago

மிளிரும் அழகு; வெளிப்படும் தன்னம்பிக்கை: நயன்தாரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!

நடிகை நயன்தாரா, வெள்ளை நிற சேலையில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.  

தென்னிந்திய திரையுலகில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக யாராலும், அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளவர் நடிகை நயன்தாரா.  தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.  

நடிகை நயன்தாரா,  கதையின் நாயகியாக நடிக்கும் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.  இவர் நடித்த மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்கள் பெரிய அளவுக்கு கை கொடுத்தன. ஆனால் அண்ணபூரணி, ஓ 2, போன்ற படங்கள் சில படங்கள் தோல்வியை சந்தித்தது.

பாலிவுட் பக்கம் சென்ற நயனுக்கு முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஜவான் படத்தின் மூலம் கிடைத்தது.  இப்படம் சுமார் 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.  மேலும் தன்னுடைய சம்பளத்தையும்  நயன்தாரா உயர்த்தியுள்ளார்.  

இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் மிகவும் எளிமையாக வெள்ளை நிற சேலையில் உள்ளார் நயன்தாரா.  புடவைக்கு மேச்சாக நெக்லஸ் மற்றும் கம்மல் அணிந்துள்ளார்.  சமூக வலைத்தளத்தில் இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe