இன்ஸ்டாவில் இருந்து விலகிய யுவன்.. இதுதான் காரணமா?

published 10 months ago

இன்ஸ்டாவில் இருந்து விலகிய யுவன்.. இதுதான் காரணமா?

இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். 
25 ஆண்டுகளாக இசைத்துறையில் சிறப்பான பணியை செய்து வருகிறார் யுவன்.  படங்களுக்கு மாஸ் பி.ஜி.எம், மெலடி மற்றும் காதல் பாடல்களுக்கு இசையமைப்பதில் வல்லவர்.

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும்  கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன். விஜயின் குரலில் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் பாடலுக்கு வரவேற்பும், அதே அளவு எதிரான கமெண்ட்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜாவையும் இசையமைப்பாளர் அனிருத்துடன் ஒப்பிட்டு பேசி பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

யுவன் இசையமைத்த இந்த பாடல் நன்றாக இல்லை என்றும், அவர் ஏன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்றும்  பல கமெண்டுஸ்கள் வந்தது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து யுவன்   விலகியுள்ளார்.  இந்த முடிவிற்கு  எதிர்மறை கமெண்டுகள் காரணமா என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe