ஏசி வேலை செய்யவில்லை என புகார்.. "அந்நியன்" பட பாணியில் பதில் அளித்த கேஜி தியேட்டர் ஊழியர்கள்! - VIDEO

published 10 months ago

ஏசி வேலை செய்யவில்லை என புகார்.. "அந்நியன்" பட பாணியில் பதில் அளித்த கேஜி தியேட்டர் ஊழியர்கள்! - VIDEO

கோவை: ஏசி வேலை செய்யாததால் ரசிகர்கள் கோவை கேஜி திரை அரங்கு  நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ளது கேஜி திரையரங்கம். கோவையில் பிரபலமான இந்த திரையரங்கில் ஆவேசம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது.

இன்று மாலை திரையரங்கில் படம் போட்ட பின்பு ஏசி வேலை செய்யாமல் இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் திரையரங்கு நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.

ஆனால் நிர்வத்தினரிடம் இருந்து முறையாக பதில் வராததால் டிக்கெட் கட்டணத்தை  திருப்பித் தருமாறு கூறி, அங்கு வாக்குவாதம் செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த போலீசார் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கோவையில் புகழ்பெற்ற திரையரங்கில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவை காண : இங்கே க்ளிக் செய்யவும்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe