மிரட்டலாக வெளியான ரஜினியின் ‘கூலி’ பட டைட்டில் டீசர்!

published 1 week ago

மிரட்டலாக வெளியான ரஜினியின் ‘கூலி’ பட டைட்டில் டீசர்!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில்  வெளியாக உள்ளது.

இந்த படத்துக்குப் பிறகு ரஜினி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.





தலைவர் -171 படம் தங்க கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி 'மாபியா' வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.  

படத்தில் ரன்வீர் சிங் மற்றும் நாகார்ஜூனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது.  படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.





தற்பொழுது படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 3.16 நிமிடங்கள் இந்த வீடியோ  ஓடுகிறது. படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்த நிலையில்,  படத்தின் பெயர் 'கூலி' என வைக்கப்பட்டுள்ளது.  இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


ரஜினியின் ‘கூலி’ பட டைட்டில் டீசர் - வீடியோவை பார்க்க லிங்கை கிளிக் செய்யவும்!

 





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw