கோவை நூதன வழிப்பறி: பைக் மீது காரை மோதி ரூ.13 லட்சம் தங்கம் சுருட்டல்!

published 1 week ago

கோவை நூதன வழிப்பறி: பைக் மீது காரை மோதி ரூ.13 லட்சம் தங்கம் சுருட்டல்!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/BECRyb4cFcSLk2dVyBE1vu

கோவை: கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(62). நகை வியாபாரி. இவர் ஆர்டரின் பெயரில் நகைக் கடைகளுக்கு தங்கம் விற்பனை செய்து வருகிறார்.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை விழுப்புரம் சென்று கடைகளுக்கு தங்க நகைகளை சப்ளை செய்வது வழக்கம். இதேபோல் அவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு கடைகளில் ஆர்டர் எடுத்து கொடுக்கும் சாந்தகுமார் என்பவருடன் பைக்கில் காந்திபுரம் பஸ் நிலையம் சென்று கொண்டிருந்தார்.


அவர்கள் பேரூர் ரோடு செல்வ சிந்தாமணி குளம் அருகே சென்ற போது பின்னால் காரில் வந்த கும்பல் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி இரண்டு பேரும் கீழே விழுந்தனர்.

பின்னர் காரில் இருந்து இறங்கி வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமாரை வாள் மற்றும் பைப்பால் சரமாரியாக தாக்கினர். பின்னர் ராஜேந்திரன் பேக்கில் வைத்திருந்த ரூ. 13 லட்சம் மதிப்பிலான 270 கிராம் தங்க நகைகளை பறித்துக் கொண்டு காரில் தப்பினர்.


அந்த வழியாக சென்றவர்கள் தாக்குதலில் காயம் அடைந்த இருவரையும் மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து ராஜேந்திரன் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 13 லட்சம் தங்க நகைகளை வழிப்பறி செய்த கும்பலை தேடி வருகின்றனர்.
 





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw