மத்திய ஆயுதபடையில் வேலை: 506 பணியிடங்கள்.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க! இதுதான் கடைசி தேதி!

published 9 months ago

மத்திய ஆயுதபடையில் வேலை: 506 பணியிடங்கள்.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க! இதுதான் கடைசி தேதி!

மத்திய ஆயுத படைப் பிரிவுகளில் காலியாக உள்ள உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 506 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க 21.05.2024 கடைசி தேதி.  

உதவி கமாண்டண்ட் பணியிடம் (ASSISTANT COMMANDANTS)

Border Security Force (BSF) - 186

Central Reserve Police Force (CRPF) - 120

Central Industrial Security Force (CISF) - 100

Indo-Tibetan Border Police (ITBP) – 58

Sashastra Seema Bal (SSB) - 42

கல்வி

இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது

20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு  

எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்  ரூ 200. பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.  

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள் தொடர்பாக கூடுதல்  விவரங்களை அறிந்து கொள்ள  https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில்  பார்வையிடவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe