கோவையில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் பாய்ந்த நபர்...!

published 9 months ago

கோவையில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் பாய்ந்த நபர்...!

கோவை: கோவை சாய்பாபா காலனி கருப்புசாமி வீதி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவரது மகன் ஆனந்த். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனையும் இருந்துள்ளது.

இதை அடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு அவரது தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா ஆகியோர் ஆனந்தை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஆனந்த் அவ்வழியே துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் நகரப் பேருந்து முன்பாக பாய்ந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe