மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை!

published 9 months ago

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த வாரம் ஒரே அடியாக பவுனுக்கு ரூ.1,160 குறைந்தது. இத்தனை நாட்களாக ஏறு முகத்தில் இருந்த தங்கம் விலை அதிரடியாக குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும், இனி தங்கம் விலை குறையும் எனவும் எதிர்பார்த்தனர். ஆனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15ம், பவுனுக்கு ரூ.120ம் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,770க்கும் ஒரு பவுன் ரூ.54,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.13ம் பவுனுக்கு ரூ.104ம் விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,546க்கும் ஒரு பவுன் ரூ.44,104க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் கிராமுக்கு 50 பைசா மட்டும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.87.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.87,500 க்கும் விற்பனையாகிறது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe