"நீ தாடி நீவும் அழகப் பார்க்க"... பட்டையை கிளப்பும் புஷ்பா 2 முதல் பாடல்! - வீடியோ உள்ளே

published 9 months ago

"நீ தாடி நீவும் அழகப் பார்க்க"... பட்டையை கிளப்பும் புஷ்பா 2 முதல் பாடல்! - வீடியோ உள்ளே

கடந்த 2021ம் ஆண்டு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில்   நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், புஷ்பா தி ரைஸ் படம் வெளியானது. இந்தப் படம் வரவேற்பையும், வெற்றியையும் பெற்று சர்வதேச அளவில் 300 கோடி ரூபாயை தாண்டி வசூலில் சாதனை படைத்தது.  

New song 'Pushpa Pushpa' from 'Pushpa 2: The Rule' released in six  languages - New song 'Pushpa Pushpa' from 'Pushpa 2: The Rule' released in  six languages -

படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் நடித்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள்  நல்ல  வரவேற்ப்பை பெற்றன.  

இப்படத்திற்காக கடந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜூன்  வென்றார். தெலுங்கு சினிமாத் துறையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற முதல் நடிகர் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார்.  

Pushpa Pushpa': Allu Arjun returns with the 'Thaggedhe Le' swag in first  single from 'Pushpa 2' - The Hindu

முதல் பாகத்தைத் தொடர்ந்து தற்போது புஷ்பா தி ரூல் - இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். முதல் பாகத்திற்கு இசையமைத்து தேசிய விருது வென்ற தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

படம்  ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக  நடைபெறுகிறது. முதல் பாகத்தைக் காட்டிலும் 2ம் பாகத்திற்கான எதிபார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Pushpa 2: அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள்  பாடலின் Promo!

முதல் பாகத்தில் ஸ்ரீவல்லி, ஊ சொல்றியா முதலிய பாடல்கள் ஹிட் ஆன நிலையில், புஷ்பா 2 படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடம்  எதிர்பார்ப்பு நிலவி  வருகிறது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் முதல் பாடலை படக்குழு இன்று மாலை  வெளியிட்டுள்ளது. புஷ்பா புஷ்பா என தொடங்கும் இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

 

புஷ்பா 2  படத்தின் முதல் பாடலை காண லிங்கை க்ளிக் செய்யவும்!

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe