ஆஸ்திரியாவில் சிறகடிக்கும் பிரியா பவானி சங்கர்!

published 9 months ago

ஆஸ்திரியாவில் சிறகடிக்கும் பிரியா பவானி சங்கர்!

செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர்  பிரியா பவானி சங்கர். தொடர்ந்து சின்னத்திரையில் கதாநாயகியாக மாறி இப்போது வெள்ளி திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.  



விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை  சீரியலில் நடித்துள்ளார். இந்த சீரியலில் பிரியா கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார். இந்த சீரியல் மூலம்  இவருக்கு நல்ல  வரவேற்பு கிடைத்தது.

இதனால் இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் குவிந்தது.  மேயாத மான், மான்ஸ்டர், மாபியா, யானை, திருச்சிற்றம்பலம், கடைக்குட்டி சிங்கம், அகிலன், பத்து தல, ருத்ரன், ரத்னம் போன்ற பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். இந்தியன் 2 திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார்.



அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களையும், வெளிநாடுகளில் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஆஸ்திரியாவில் பயணம் மேற்கொண்டுள்ள படங்களை பதிவிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe