ரயில்வே போலீஸ் வேலை: 10ம் வகுப்பு தகுதி.. விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி!

published 9 months ago

ரயில்வே போலீஸ் வேலை: 10ம் வகுப்பு தகுதி.. விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி!

ரயில்வே பாதுகாப்பு படையில் (Railway Protection Force) காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 4,208 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

காலியிடங்கள் எண்ணிக்கை

கான்ஸ்டபிள்  ஆண்கள்: 3,577

கான்ஸ்டபிள்  பெண்கள்: 631

கல்வி

இந்த பணியிடங்களுக்கு  10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது

01.07.2024 அன்று 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள்  இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.  SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

சம்பளம்

இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 21,700 சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு

இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு, உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி  விண்ணப்பிப்பது?

https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 500,  SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி  14.05.2024 ஆகும்.

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள் அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe