புது பெண்ணே... அதிதி ஷங்கர் அசத்தும் போட்டோஸ்!

published 9 months ago

புது பெண்ணே... அதிதி ஷங்கர் அசத்தும் போட்டோஸ்!

நடிகை அதிதி ஷங்கர் புடவையில் இருக்கும் அழகிய போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி மருத்துவ படிப்பை முடித்துவிட்டு, விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.  

2022 ஆம் ஆண்டு முத்தையா இயக்கிய வெளியான விருமன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.  தனது முதல் படத்திலேயே கிராமத்து நாயகியாக நடித்ததற்காக   விருதுகளை பெற்றுள்ளார். இந்தப் படத்தின் மூலம் பாடகியாகவும் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  மாவீரன் திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார். அதிதி ஷங்கர் நடித்த இந்த இரண்டு படங்களுமே  ஹிட் ஆனது.

தற்போது இவருக்கு  பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.  நடிகர் சூர்யா - சுதா கொங்கரா இணைந்து தயாரிக்கும் புறநானூறு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். நடிகர் அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்க  கமிட் ஆகி இருக்கிறார்.

படங்களில் பிசியாகி நடித்து வரும் அதிதி, விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது புடவையில் புதுமண பெண் போல இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe