Press Council of India வேலை வாய்ப்பு: காலி பணியிடங்கள் அறிவிப்பு... ரூ.34,800 வரை சம்பளம்!

published 9 months ago

Press Council of India வேலை வாய்ப்பு: காலி பணியிடங்கள் அறிவிப்பு... ரூ.34,800 வரை  சம்பளம்!

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press Council of India) சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணிகளுக்கான சம்பளம், கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவலை காண்போம்.

காலிப் பணியிடங்கள்

Assistant Section Officer, Stenographer Grade-D, Stenographer Grade-C ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி  

இந்த பணிகளுக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Stenographer Grade-D - பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

சம்பளம்

இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு  ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை மாத சம்பளம்  வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி  01-07-2024 ஆகும்.

அனுப்ப வேண்டிய முகவரி : Secretary, Press Council of India, Soochna Bhawan, 8 CGO Complex, Lodhi Road,
New Delhi-110003.

தேர்வு

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம்  தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

மேலும் தகவல்

இந்த பணியிடங்கள் குறித்து சந்தேகங்கள் மற்றும் மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு https://presscouncil.nic.in/Openings.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe