இக்கரை போலுவம்பட்டியில் அமைய உள்ள ஈசா மின் மயானத்திற்கு தடை விதிக்க வேண்டும்...

published 9 months ago

இக்கரை போலுவம்பட்டியில் அமைய உள்ள ஈசா மின் மயானத்திற்கு தடை விதிக்க வேண்டும்...

கோவை: கோவை இக்கரை போலுவம்பட்டி கிராமத்தில் ஈசா யோகா சார்பில் அமைய உள்ள மின் மயானத்திற்கு தடை விதிக்க கோரி பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கோவையில் பல்வேறு பகுதியில் ஈசா மையத்தின் மின் மயானங்கள் செயல்பட்டு வருகிறது. இன்னும் கூடுதலாக மின் மயானங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்நிலை செம்மேடு பகுதியில் ஈசா யோகா நிறுவனம் சார்பில் இக்கரை போளுவம்பட்டி பகுதியில் மயானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  

இது குறித்து ரவிகுமார் கூறுகையில் அப்பகுதியில் ஏற்கனவே சுடுகாடும் இடுகாடும் இருப்பதாகவும்

மேலும் ஈசாவில் மர்ம மரணங்கள் தொடர்வதாகவும் இது குறித்து பலமுறை போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் வேண்டுமென்றே மின் மயானம் அமைய உள்ளதாக குறிப்பிட்டனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் ஈசாவின் மின் மயான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

மேலும் அங்கு ஈசாவின் மின் மயானம் அமைந்தால் அனைத்து அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் என  இவ்வாறு தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe