வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை எப்படி பதிவு செய்வது..?

published 9 months ago

வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை எப்படி பதிவு செய்வது..?

கோவை: கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேருவதற்கு விருப்பமுள்ள மாணவ மாணவியர் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி 
நிலையத்தில் மே 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 10.05.2024 முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ELECTRICIAN FITTER TEXTILE MECHATRONICS மற்றும் FASHION DESIGN TECHNOLOGY போன்ற பல்வேறு பிரிவுகளில் (ஆண்-பெண்) இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் ஈராண்டுகள் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சியில் சேரவிரும்பும் பயிற்சியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் 07/06/2024 க்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவ/மாணவியர் நலன்கருதி மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இலவசமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பயிற்சிக்கட்டணம் முற்றிலும் இலவசம்.

அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை சீருடைகள். காலணிகள் மற்றும் வரைபடக்கருவிகள் NIMI புத்தகம் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. பிரதிமாதம் ரூ.750/ வீதம் வருகையின் அடிப்படையில் கல்வி
உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது. மேலும் அரசு பள்ளியில் பயின்ற
மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான கல்வித்தகுதி, தொழிற்பிரிவுகளை பொருத்து குறைந்தது 10ஆம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரையும் பெண்களுக்கு
14 வயது முதல் வயது
வரம்பு இல்லை.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் (CAMPUS INTERVIEW) மூலம் தனியார்துறையில் 100% வேலைவாய்ப்பு
பெற்று வழங்கப்படுகிறது  என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe