தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும்! கோவையில் எப்படி? - வேளாண் பலகலை

published 8 months ago

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும்! கோவையில் எப்படி? - வேளாண் பலகலை

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 2024 ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:

எதிர்வரக்கூடிய 2024-ம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கான (ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் (Australian Rainman International V.4.3 Software) 2024-ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த  முன்னறிவிப்புக்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது; எதிர்பார்க்கப்படும் மழையளவு கீழே உள்ள புகைப்படத்தில் தரப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 210 மி.மீ., பதிவாகும் நிலையில், இந்தாண்டு 8 மி.மீ குறைவாக 195 மி.மீ., மழை எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe