அதிரடி; இன்று சர்ரென குறைந்தது தங்கம் விலை!

published 8 months ago

அதிரடி; இன்று சர்ரென குறைந்தது தங்கம் விலை!

கோவை: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தங்கம் விலை நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வந்தது. தினமும் ஆயிரக்கணக்கில் விலையேற்றம் கண்டு பவுன் ரூ.55 ஆயிரத்தைக் கடந்து விற்பனையானது. 

எதிர்வரும் முகூர்த்த தினங்கள், இந்தியத் தேர்தல் காரணமாக தங்கம் விலை அதிகரித்திருப்பதாகவும், இதன் விலை குறையும் என்றும் தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே இம்மாதத்தின் தொடக்கத்தில் சரிவை சந்தித்த தங்கம் விலை, இம்மாதத்தில் வந்த முகூர்த்த தினத்தை முன்னிட்டு மீண்டும் அதிகரித்தது. தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது.

கடந்த 18ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.54,800க்கு விற்பனை செய்யப்பட்டது. 19ம் தேதி விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இதனிடையே தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,860க்கும் ஒரு பவுன் ரூ.54,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.720 விலை குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.5,529க்கும் ஒரு பவுன் ரூ.44,232க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு விலை அதிகரித்து வந்த வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. 

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.30 குறைந்துள்ளது. 

ஒரு கிராம் வெள்ளி ரூ.97க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe