கோவையில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வது தொடர்பாக ஆட்சித்தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்...

published 8 months ago

கோவையில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வது தொடர்பாக ஆட்சித்தலைவர்  தலைமையில் ஆலோசனை கூட்டம்...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை தொடர்பாக மாவட்ட அளவிலான பணிக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருகிராந்திகுமார் பாடி  தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கோவை தெற்கு) சந்திரசேகரன், மண்டல இணை இயக்குநர் (நகராட்சி) இளங்கோவன் உட்பட நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் / பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும். சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் தடையை மீறி இப்பொருட்களை பயன்படுத்துவது விற்பனை செய்யவது, இருப்பு வைப்பதும் சட்டப்படி குற்றமாகும். கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து, அவ்வாறு வைத்திருப்பின், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளும், அரசு விதிகளின்படி, அபாராதமும் விதிக்கவேண்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்துவதற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வால்பாறைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துகிறதா என்பதை வனத்துறையுடன் இணைந்து, சோதனைச் சாவடிகளில் சம்மந்தப்பட்ட துறைகள் ஆய்வு செய்யவேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் விற்பனையை தவிர்க்கும் வகையில், வால்பாறையில் முக்கியமான சுற்றுலா பகுதிகளில் குடிநீர் ஏடிஎம் வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்.

பிளாஸ்டிக்  பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாக அரசால் கொண்டுவரப்பட்ட மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தவேண்டும். தினசரி சந்தைகள் உள்ளிட்ட தேவையான இடங்களில் மஞ்சப்பை ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்ய தேவையான நடவடிக்கை
எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe