குடும்பத்துடன் குதூகலம்... நயன் - விக்கி ஹாங்காங் போட்டோஸ்!

published 8 months ago

குடும்பத்துடன் குதூகலம்... நயன் - விக்கி ஹாங்காங் போட்டோஸ்!

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு வெக்கேஷன் சென்றுள்ளனர்.  இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் உலகில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக ஜொலிப்பவர் நடிகை நயன்தாரா.  முதன் முதலில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தில் தான் அறிமுகமானார்.

இதுவரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து  பல படங்களில்  நடித்து விட்டார். நடிகை நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  

நானும் ரௌடி தான் படம் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இடையே காதல் பற்றிக்கொண்டது.  சுமார் 5 வருடங்களுக்கும் மேலாக, காதலித்து பின்னர் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தனர்.  தமிழ் திரையுலக செலிப்ரிட்டி ஜோடிக்களுள் மிகவும் பிரபலமானவர்கள் நயன்-விக்னேஷ் சிவன் ஜோடி.  2022 ஆண்டு இவர்களுக்கு  இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். இந்த குழந்தைகளின் பெயர், உயிர் மற்றும் உலக்.  

அடிக்கடி தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஹாங்காங்  பறந்துள்ளார். அங்கு என்ஜாய் செய்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe