Zoho ஐடி நிறுவனத்தில் வேலை: தமிழகத்தில் பணி... சீக்கிரம் விண்ணப்பிங்க!

published 8 months ago

Zoho ஐடி நிறுவனத்தில் வேலை: தமிழகத்தில் பணி...  சீக்கிரம் விண்ணப்பிங்க!

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோவில் (Zoho) வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜோஹோ நிறுவனம்  தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகிய வண்ணம் உள்ளன.

அதன்படி தற்போது  Incident Response Engineer (CSIRT) என்ற பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்த பணிக்கு  ஒன்று முதல் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க என்ன பணி திறன்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து அறிவிப்பில் விளக்கமாக  கொடுக்கப்பட்டுள்ளது.

பணி அனுபவம், திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடவில்லை. அதனால் உடனே விண்ணப்பிப்பது நல்லது.  இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழகத்தில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவார்கள்.  

இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://careers.zohocorp.com/forms/fcc89b5ebd373d598e0224d10f2199d1c60170d7abe5e714c3bca4fb8563ef6c என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe