கோவை வழியாக செல்லும் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம்!

published 8 months ago

கோவை வழியாக செல்லும் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம்!

கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை வழியாக செல்லும் பல்வேறு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

A. பின்வரும் ரயில் சேவைகள் இருகூர் - போதனூர் வழியாக திருப்பி விடப்படும்

1. 05.06.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்ட ரயில் எண்.22504 திப்ருகார் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.

இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில் நின்று செல்லாது. அதற்கு பதிலாக போத்தனூர் ஜங்சனில் ரயில் நிறுத்தப்படும்.

2. ரயில் எண்.16159 சென்னை எழும்பூர் - மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 05.06.2024 & 06.06.2024 ஆகிய தேதிகளில் இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.  இதன் விளைவாக, இந்த ரயில் கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் ஜங்சனில்  நிற்காது.

3. ரயில் எண்.12626 புது தில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ், 05.06.2024 & 06.06.2024 ஆகிய தேதிகளில் இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.  இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்  நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ஜங்சனில் ரயில் நிறுத்தப்படும்.

4. ரயில் எண்.12677 KSR பெங்களூரு - எர்ணாகுளம் Jn இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், 05.06.2024 & 06.06.2024 அன்று இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.  இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்  நிற்காமல் போத்தனூர் ஜங்சனில் நிறுத்தப்படும்.

5. ரயில் எண்.22642 ஷாலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், 06.06.2024 அன்று இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.  இந்த ரயிலும் போத்தனூர் ஜங்சனில்  நிறுத்தப்படும்.
 

6. ரயில் எண்.16318 ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், 06.06.2024 அன்று இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.  இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்  நிறுத்தப்படாமல் போத்தனூர் ஜங்சனில் நிறுத்தப்படும்.

B. பின்வரும் ரயில் சேவைகள் போத்தனூர் - இருகூர் வழியாக திருப்பி விடப்படும்

1. ரயில் எண்.13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், 05.06.2024 & 06.06.2024 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ரயில் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.  போத்தனூர் ஜங்சனில் ரயில் நிறுத்தம் வழங்கப்படும்.

2. 05.06.2024 & 06.06.2024 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் வழியாக இயக்கப்படும் ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜே.என் - கே.எஸ்.ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.  

இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe