வாக்கு எண்ணும் மையத்தில் கோவை திமுக வேட்பாளர் கொடுத்த பேட்டி...

published 8 months ago

வாக்கு எண்ணும் மையத்தில் கோவை திமுக வேட்பாளர் கொடுத்த பேட்டி...

கோவை: கோவை மக்களவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்கு என்னும் மையமான ஜிசிடி கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

தற்போது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் உள்ளோம்.முடிவில்
ஒரு லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.முதலமைச்சரின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்ததுதான் இந்த அடையாளங்கள்.

குறிப்பாக ஜிஎஸ்டி பிரச்சனையால்  தொழிற்சாலைகள் இங்கு நலிவடைந்துள்ளது.இதனால் இங்குள்ள வாழ்வாதாரமே கேள்விக்குறியாகவே உள்ளது .அதனுடைய பதில் தான் இந்த தீர்ப்பு.முதலமைச்சர்க்கு தான் இந்த பெருமை அனைத்தும்.முதலமைச்சர் தமிழக மக்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தி கொடுப்பார்.

கோவை மிகப்பெரிய தொழில் நகரம் தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் எங்களுக்கு வாக்களித்தது மீண்டும் பழைய கோவை அடையாளங்களை பெற எடுத்துக் கொள்கிறோம்.நாங்கள் எதிர்பார்த்தபடி மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

பாஜக உடைய வளர்ச்சியை காட்டுவதை விட அதிமுகவின் செயல்பாடு தான் காட்டுகிறது.எங்களுடைய கருத்து.

தமிழகத்தை பொறுத்தவரை இந்திய கூட்டணிக்கு வெற்றி.ஜிஎஸ்டி பிரச்சனை சிறுகுறு தொழிற்சாலை பிரச்சனை, விமான நிலைய விரிவாக்கம் ,ரயில் நிலையம் உள்ளிட்டவை சீர் அமைப்பதோடு,மக்கள் என்ன எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்களோ அதை சீரமைத்து தருவோம் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe