பிரேம்ஜிக்கு அவரது காதலியுடன் கல்யாணம்... அறிக்கை வெளியிட்ட வெங்கட் பிரபு!

published 8 months ago

பிரேம்ஜிக்கு அவரது காதலியுடன் கல்யாணம்... அறிக்கை வெளியிட்ட வெங்கட் பிரபு!

வரும் ஜூன் 9ம் தேதி பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக இயக்குனரும், அவரது அண்ணனுமான  வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.  

நடிகர்  பிரேம்ஜிக்கும், இந்து என்பவருக்கும் ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் என  சமூக வலைதளத்தில்  திருமண அழைப்பிதழ் வெளியாகி வைரலானது. இந்நிலையில் பிரேம்ஜியின் அண்ணனான இயக்குநர் வெங்கட் பிரபு திருமணத்தை உறுதி படுத்தியுள்ளார்.

Actor Premji gets married in June... Wedding invitation goes viral... - one  india tamil breaking news 24x7

இதுதொடர்பாக பிரேம்ஜியின் திருமணம் குறித்து அறிக்கை ஒன்றையும்  வெளியிட்டுள்ளார்  அதில் அவர் கூறியிருப்பதாவது:  "இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.

Venkat Prabhu wishes Premji on twitter for his birthday.

எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. " பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்?" " சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?" இதை எல்லாவற்றையும் விட, "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.

Wedding bells for Premgi Amaren at the age of 45; Bride details revealed! -  Tamil News - IndiaGlitz.com

அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்.

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்.

BTW, THE GOAT அப்டேட் விரைவில்...

இப்படிக்கு, பாசத்துடன்... உங்கள் VP" என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe