பாஜக தோல்வி- கோவையில் ஆட்டுக்கறி பிரியாணி விருந்து...

published 8 months ago

பாஜக தோல்வி- கோவையில் ஆட்டுக்கறி பிரியாணி விருந்து...

கோவை: நேற்றைய தினம் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

இதனை திமுக வினர் பலரும்  நேற்று முதல் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பல்வேறு இடங்களில்  ஆட்டுக்கறி பிரியாணியை பொதுமக்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அண்ணாமலையின் தோல்வி மற்றும் பாஜக வின் தோல்வியை கொண்டாடும் விதமாக ஆட்டுக்கறி பிரியாணி விருந்து படைத்து கொண்டாடினர். 

காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் பல்வேறு திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe