குரூப் 4 தேர்வுக்கு 6 மாத கைக்குழந்தையுடன் வந்த பெண்!

published 8 months ago

குரூப் 4 தேர்வுக்கு 6 மாத கைக்குழந்தையுடன் வந்த பெண்!

கோவை: கோவையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வை பெண் ஒருவர் 6 மாத கைக்குழந்தையுடன் வந்து எழுதினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30க்கு தொடங்கியது. 

பல்வேறு அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து, கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான இத்தேர்வை தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 232 மையங்களில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 69,737 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில், டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திலும் தேர்வு நடைபெற்றது. 

இந்த தேர்வு மையத்திற்கு சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த கரோலினா என்ற பெண், தனது 6 மாத கை குழந்தையுடன் வந்தார். தேர்வு அறைக்கு செல்லும் வரை குழந்தையை கவனித்துக் கொண்ட கரோலினா, தேர்வு அறைக்கு செல்லும் முன் குழந்தையை கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வெழுதச் சென்றார்.

இந்த தம்பதியை பார்த்த மற்ற தேர்வர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe