மேம்பாலத் தூண்களில் போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது வழக்கு

published 2 years ago

மேம்பாலத் தூண்களில் போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது வழக்கு

கோவை, ஜூலை.28-

கோவையில் அவினாசி சாலை பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட தூண்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த தூண்களில் சமீப காலமாக அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டு வந்தன .இது நகரில் அழகை கெடுப்பதோடு வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வண்ணமாக இருந்து வந்தது. இதை அடுத்து பாலத்தின் தூண்களில் போஸ்டர்கள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்திருந்தார்.

 இந்நிலையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் ஜெயலட்சுமி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரில் கோவை நவ இந்தியா பகுதியிலிருந்து கோல்டு வின்ஸ் வரையிலான சாலையில் பாலத்தின் தூண்களில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார். இதை அடுத்து போலீசார் 5 நிறுவனத்தின் மீது  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe