ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீ விபத்து- தனியார் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம்...

published 8 months ago

ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீ விபத்து- தனியார் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம்...

கோவை: கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பர்னிசிங்  அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட பணியாளர்கள் உடனடியாக வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர்  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் சுதாரித்துக் கொண்டு வெளியேறியதால் பணியாளர்கள்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது குறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சில ஆவணங்கள், கணினி சம்பந்தமான மின் சாதன பொருட்கள் எரிந்ததாக கூறப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe