தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரத்த தான முகாம்...

published 8 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரத்த தான முகாம்...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக இரத்த தானம் தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை உடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இந்த முகாமை துவக்கி வைத்தார்.

சிங்காநல்லூர், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையின் முதன்மையர் ரவீந்திரன், இதில் தலைமை வகித்தார். இஎஸ்ஐ ரத்த வங்கியின் தலைமை மருத்துவர் டாக்டர் உமாசரோஜினி தனது குழுவினருடன் முகாமை நடத்தினார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர். கொடையாளர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 104 பேர் இரத்த தானம் செய்தனர்.

முகாம் துவங்குவதற்கு முன்பாக வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டத்தின் 200 மாணவர்கள் இரத்த தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பல்கலைக்கழகத்தின் மாணவர் நலத்துறை முதன்மையர் முனைவர் மரகதம் பேரணியை துவக்கி வைத்தார். 

நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலுவலர்களும் ஒருங்கிணைப்பாளரும் கலந்து கொண்டனர். பேரணியில் மாணவ, மாணவியர் இரத்த தானத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்களை பொதுமக்களிடம்
பகிர்ந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe