கோவையில் இன்று நடைபெறுகிறது முப்பெரும் விழா...

published 8 months ago

கோவையில் இன்று நடைபெறுகிறது முப்பெரும் விழா...

கோவை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 40/40 I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெற்றிக்கு காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு, கலைஞர் நூற்றாண்டு விழா என மூன்று நிகழ்வுகளை இணைத்து முப்பெரும் விழாவாக இன்று கோவையில் கொடிசியா மைதானத்தில் நடத்தப்படுகிறது. 

இன்று மாலை இந்த விழா துவங்க உள்ளது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மேலும் தமிழக எம்.பி க்கள் 40 பேர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி முக்கிய தலைவர்களான வைகோ, முத்தரசன், உட்பட முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் முத்துச்சாமி அங்கே இருந்து அனைத்தையும் பார்த்து கொள்கிறார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பி க்கள் என அனைவரும் இன்று சாலை மார்கமாகவும், விமானம் மூலமாகவும் கோவைக்கு வருகை புரிய உள்ளனர்.

இந்நிகழ்ச்சி சுமார் லட்சக்கணக்கான பேர் அமர இருக்கைகள் போடப்பட்டு பொதுமக்கள் திமுக தொண்டர்கள் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக இப்பகுதி மட்டுமல்லாது கொடிசியா சுற்றுப்புற பகுதிகள், விமான நிலையம் என சுமார் 500க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe