வானவில் நண்பர்கள்: கோவையில் திருநங்கை, இருபால்- ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி!

published 8 months ago

வானவில் நண்பர்கள்: கோவையில் திருநங்கை, இருபால்- ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி!

கோவை: கோவையில் இன்று LGBTQ சமூகத்தினர் வானவில் பேரணி நடத்தினர்.

ஜூன் மாதத்தின் முதல் வாரம் முதல் உலகம் முழுவதும் LGBTQ சமூகத்துக்கான சிறப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது.

உலக LGBTQ மாதத்தை முன்னிட்டு கோவையில் வானவில் திருவிழா சுயமரியாதை பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் விதவிதமான ஆடைகள் அணிந்தும், தங்கள் சமூகத்தினர் குறித்த விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி கோவை ரேஸ்கோர்ஸ் சாலை தாமஸ் பூங்காவில் இருந்து தொடங்கி ரேஸ்கோர்ஸ் சாலையை சுற்றி வந்து, தாமஸ் பூங்காவில் நிறைவடைந்தது.

இந்த LGBTQ அடையாளத்தை உணர்த்தும் வகையில் பங்கேற்பாளர்கள், ஆண்-பெண் என்று வரையறுக்கப்பட்டுள்ள ஆடைகள், சிகையலங்காரங்களை தங்களுக்கு பிடித்தவாறு உடுத்தியும், அலங்கரித்தும் வந்தினருந்தனர்.

ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட LGBTQ சமூகத்தினர் மட்டுமின்றி அவர்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்களும் இதில் கலந்துகொண்டு ஆதரவை வெளிப்படுத்தினர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe