நாளை ஓ.டி.டி.,யில் வெளியாகும் அரண்மனை 4!

published 8 months ago

நாளை ஓ.டி.டி.,யில்  வெளியாகும் அரண்மனை 4!

அரண்மனை 4 திரைப்படம் ஓ.டி.டி.,யில் நாளை வெளியாகியுள்ளது.

சுந்தர். சி இயக்கிய அரண்மனை 1, 2, 3 போன்ற படங்கள்  வெற்றி படங்களாக அமைந்தன.  தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் கடந்த மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  

அரண்மனை 4:  தமன்னா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர்.    

படத்தில் வந்த அச்சச்சோ பாடல் மிகவும் பிரபலமாகி விட்டது.  மக்கள் மத்தியில் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாடலுக்கு தமன்னாவும், ராஷி கன்னாவும் சேர்ந்து சூப்பராக ஆடியிருக்கிறார்கள்.  மேலும் குஷ்புவும், சிம்ரனும் சேர்ந்து ஆடிய பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் வசூலில்  100 கோடியை தாண்டியது.  

Aranmanai 4 OTT Release Date: Check Hindi Release Date | magicpin blog

இந்த நிலையில்  அரண்மனை 4 திரைப்படம்  வரும்  நாளை (ஜூன் 21) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி., தளத்தில்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக  உள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe