வங்கியில் வேலை: 10ம் வகுப்பு தகுதி... உடனே விண்ணப்பிங்க!

published 7 months ago

வங்கியில் வேலை: 10ம் வகுப்பு தகுதி... உடனே விண்ணப்பிங்க!

இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கியில் (Repco Bank) அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடங்கள் 

அலுவலக உதவியாளர் (Office Assistant) - 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி

விண்ணப்பிக்க விருப்பும் நபர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (கல்வி தகுதி விவரங்களை அறிவிப்பில் காணவும்.)

சம்பளம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.9,500 – ரூ.10,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு

எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://repcobank.s3.ap-south-1.amazonaws.com/Application.pdf என்ற இணையதளத்தில் உள்ள  விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2024 ஆகும்.

அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017.

மேலும் விவரம்

இந்த பணியிடங்கள்  தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள https://repcobank.s3.ap-south-1.amazonaws.com/Notification+OA(T).pdf என்ற அறிவிப்பை படித்து பார்த்த பின்னர் விண்ணப்பிக்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe