வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்’ படம் - ட்ரெண்டாகும் படங்கள்!

published 7 months ago

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்’ படம் - ட்ரெண்டாகும் படங்கள்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக கவின் உள்ளார். சின்னத்திரையில் அறிமுகமான இவர், வெள்ளித் திரையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

நடிகர் கவின் சின்னத்திரையில் முதலில் அறிமுகமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில்  பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 'நட்புனா என்னன்னு தெரியுமா' படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமானார்.

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் இன்று  தொடங்கியது! – News18 தமிழ்

லிப்ட்,  டாடா திரைப்படங்கள் இவரது சினிமா வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது.  ‘டாடா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கின.  

Nothing Is Permanent, Says Actor Kavin | Times Now

டாடா படத்தை தொடர்ந்து இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' திரைப்படத்தில் நடித்தார். மே 10  திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படம், இதுவரை ரூ.25 கோடி வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கவின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Mask' movie started with pooja - photos go viral | பூஜையுடன் தொடங்கிய ' மாஸ்க்' திரைப்படம் - புகைப்படங்கள் வைரல்

நடன இயக்குனர்  சதிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள  'கிஸ்' படத்தில் கவின் நடித்துள்ளார்.  தொடர்ந்து சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில், நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில்,  'ப்ளடி பெக்கர்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

Actor Kavin shooting photos of 'Mask' film | 'மாஸ்க் ...

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், விக்ரனன் அசோக் இயக்கத்தில் 'மாஸ்க்'  திரைப்படத்தில் கவின் நடித்து வருகிறார்.  படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மா, ஆண்டிரியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது மாஸ்க் படத்தின்  படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில்  ட்ரெண்டாகி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe