கோட்டைமேட்டில் அலப்பறை செய்யும் குரங்கு…

published 7 months ago

கோட்டைமேட்டில் அலப்பறை செய்யும் குரங்கு…

கோவை: உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியில் குரங்கு ஒன்று புகுந்துள்ளது.

கோவை மாவட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் நகரப் பகுதிகளுக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அவ்வப்போது குரங்குகள் கோவை வீதிகளுக்குள் புகுந்து  அங்குமிங்கும் தாவி பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்த வருகின்றன.

இதனிடையே இன்று உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியில் குரங்கு ஒன்று நுழைந்தது. அந்தக் குரங்கு சாமியார் புது வீதி, சுப்ரமணிய சுவாமி கோவில் வீதிகளுக்குள் அமைந்துள்ள வீடுகள் மீது ஏறி சேட்டை செய்து வருகிறது.

வனத்துறையினர் இந்த குரங்கை விரைந்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe