தோழியின் திருமணம்... குடகு பாரம்பரிய உடையில் ராஷ்மிகா!

published 7 months ago

தோழியின் திருமணம்... குடகு  பாரம்பரிய உடையில் ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா தன்  சொந்த ஊரான கர்நாடகா மாநிலத்தில் உள்ள  குடகு பகுதியின் பாரம்பரிய உடையில் இருக்கும்  புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகின்றார் ராஷ்மிகா. முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து,  ரசிகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

மேலும் பாலிவுட்டில் குட் பாய் படம், மிஷன் மஜ்னு, அனிமல் படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில்  நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் உடன்  புஷ்பா 2 படத்தில் நடித்துள்ளார்.  

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா தன்  சொந்த மாநிலமான கர்நாடகாவில் உள்ள  குடகு பகுதியின் பாரம்பரிய உடையில் இருக்கும்  புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.



பல மாதங்களுக்குப் பின்னர்,  குடகு மலைப்பகுதியில் தனது தோழியின் திருமண நிகழ்ச்சிக்கு  ராஷ்மிகா மந்தனா சென்றுள்ளார். இதில் அவர், தோழிகளுடன்  பாரம்பரிய உடையில் இருக்கும் புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe