கோவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை பேருக்கு சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது?- மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்...

published 7 months ago

கோவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை பேருக்கு சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது?- மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்...

கோவை: பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பிரத்யேக சிறப்பு தொழில் முனைவோர் திட்டமாக "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை" (ANNAL AMBEDKAR BUSINESS CHAMPIONS SCHEME - AABCS) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற தொழில்முனைவோர்களாக அளவிலேயே இருப்பதை மாற்றி உருவாகவும், பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும், அச்சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து முன்னேற்ற பாதையில்
செல்லவும் இந்திய அளவில் முதன்மையான திட்டமாக அம்பேத்கர் தொழில்
முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவர் புதிய மற்றும் ஏற்கெனவே தொழில் செய்து வருவோர் தொழிலினை விரிவாக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் மானியமாகவும். 6 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonlinetn.gov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவின் மூலம் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல். விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் இலவசமாக வழங்கப்படும். கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்குகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்தாண்டு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 55 நபர்களுக்கு ரூ.6.79 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 213 நபர்களுக்கு ரூ.27.92 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும்.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 284 நபர்களுக்கு ரூ.3.20 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 375 நபர்களுக்கு 11.79/கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆகமொத்தம், கடந்த மூன்று ஆண்டுகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தில்/மாவட்ட தொழில் மையம் சார்பில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம்
மொத்தம் 927 நபர்களுக்கு ரூ.49.70 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe