கோவை மாவட்டத்தில் குழந்தைகள் அலகில் கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

published 7 months ago

கோவை மாவட்டத்தில் குழந்தைகள் அலகில் கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

கோவை: கோவை மாவட்டத்தில் குழந்தைகள் அலகில் கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாவட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator Rs 13240/-) பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 09.07.2024 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள நபர்கள் சான்றிதழ்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வரும் 09.07.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க https://coimbatore.nic.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அறை எண் 32 இரண்டாவது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர்-641018.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe