கோவையில் உள்ள மாற்றுத்திறனாளிக்கான பயிற்சி மையங்கள், சிறப்பு பள்ளிகள் மனநல காப்பகங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை...

published 7 months ago

கோவையில் உள்ள மாற்றுத்திறனாளிக்கான பயிற்சி மையங்கள், சிறப்பு பள்ளிகள் மனநல காப்பகங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை...

கோவை: கோயம்புத்துார் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான பயிற்சி மையங்கள், சிறப்பு பள்ளிகள் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய இல்லங்கள், மனநல காப்பகங்கள் பதிவுச்சான்று அல்லது அங்கீகாரம் பெறாமல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக கல்வி அளித்தல், இயன்முறை தொழிற்பயிற்சி அளித்தல் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை அரசு சாரா நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன்படி பதிவுச்சான்று மற்றும் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது. 

சட்டத்தின்படி, பதிவுச்சான்று மற்றும் அங்கீகாரம் நிறுவனங்கள் ஒருமாத காலத்திற்குள் இதுநாள் வரையில் மேற்கண்ட பெறாமல் இயங்கி வரும் அரசு சாரா அங்கீகாரம் பெறவில்லையென்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்கள் அடங்கிய கருத்துருவை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து அரசு அங்கீகாரம் மற்றும் பதிவுச்சான்று உடன் பெற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe